MENTALLY ILL?

                                                           MENTAL DISORDERS?

மனத்தளர்ச்சி?

    இதனை மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு             சூழ்நிலையில் மற்றும் சந்தர்ப்பத்தில் சில நாள்/ வாரம்/வருடம்            நிச்சயமாக மனத்தளர்ச்சி சந்திக்க வாய்ப்புள்ளது. 


இன்றைய கால கட்டத்தில் சிறு குழந்தைகளும் இத்தகைய அறிகுறிகள் வெளிப்படுகிறது. நம்மில் பலர் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், உடல் இரண்டுமே பாதிக்கப்படுகின்றன. மனத்தளர்ச்சி என்பது ஓர் உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்றும் சொல்லலாம்.


இது சில முக்கியமான வகைகள் தங்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் கீழே கொடுத்துள்ளேன்.

Depression?

 All of us should meet depression situation in our life journey , we may experience this in some situation and occasion some day /week /year.

 In this updated world, this kind of depression appeared child's life journey too because of their family circumstances. Many of us feel this as physical fatigue.  In fact, both the mind and body are affected.  Depression is an emotion.  It can also be called a negative emotion.

Here We have some major types of mental disorder and causes.

1,பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு/  MAJOR DIPRESSION

இது அன்றாட வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 உதாரணமாக:

 மனச்சோர்வடைந்த மனநிலை அல்லது நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு மற்றும் அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 காரணங்கள்

  உயிரியல், உளவியல் மற்றும் சமூக அடிப்படையில் வெளிப்படும் மனநிலை சோர்வு ஆகும்.  இது மூளையின் சில நரம்பியல் மாற்றத்தை கொண்டு வந்து, மூளை செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

It will be create an impact of daily work.

Example:

Depressed mood or loss of interest in activities, causing significant impairment in daily life.

Reasons

Biological, psychological and social sources of distress. It leads changes in brain function, including altered activity of certain neural circuits in the brain.

2, Anxiety disorder/ கவலைக் கோளாறு

கவலை என்பது உடலின் உற்சாக செயல்பாட்டை தாக்கும் உடல் ரீதியான மாற்றங்களுடன் சேர்ந்து கொண்ட கவலை மிகுந்த உணர்வு. கவலை என்பது ஒற்றை முறையிலோ அல்லது மூன்றுவகையான கவலைகளின் கலவையாகவோ இருக்கக்கூடும். கவலை, பதட்டம் அல்லது பயம் போன்ற உணர்வுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மனநலக் கோளாறு.

 இவை ஒருவரின் அன்றாட செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் வலுவான தன்மையை கொண்டுள்ளது.

A mental health disorder arranged by feelings of worry, anxiety or fear.

Anxiety is an anxious feeling accompanied by physical changes that affect the body’s excitatory function.  Anxiety can be a single pattern or a combination of all three types of anxiety.

These are strong fact to interfere with one's daily activities.


3,    இருமுனையப் பிறழ்வு / Bipolar disorder


இதனை இருமுனையப் பிறழ்வு’ என்று குறிப்பிடலாம்.

அதாவது 

1) மனஎழுச்சி,             2) மனஅழுத்தம்

 உள்ளிட்ட இரண்டும் சேர்ந்தால் இருமுனையப் பிறழ்வு ஏற்படுகிறது . அதனால்தான், ஒருவருக்கு அதிகமான சந்தோஷம் ஏற்படும்போது மனஎழுச்சி ஏற்படும். இவ்வாறான அதிக மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு.


சில நேரங்களில் இரண்டும் சேர்ந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம்.


இவ்வாறு இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே “வழமையான” உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சிலர்  தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் – இது விரைவுச் சுழற்சி எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும்.

Also called: manic depression

A disorder which is related with stages of mood swings ranging from depressive lows to manic highs.

Cause is a combination of genetics, environment and altered brain structure and chemistry may play a role.

Thus there are “ordinary” states of consciousness between the two extremes;  However, some people may experience rapid changes in relaxation and excitement – this is called rapid cycling.  In extreme manic states, psychotic symptoms such as hallucinations and hallucinations are manifested.

4,மறதிநோய்/  Dementia

மறதிநோய் என்பது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவையும், அதனால் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படும் சீர்குலைவையும் காட்டும் நோய்க் கூட்டறிகுறியாகும்.


இதன் விளைவாக ஒருவரில் ஞாபகம், மொழித்திறன், காட்சி உணர் காரணிகள் திறன், பிரச்சனை தீர்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குவிப்பு, கவனம் செலுத்தல் போன்ற தொழிற்பாடுகளில் குறைபாடு ஏற்படும். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.


Bunch of thinking and social symptoms that interferes with daily functioning.

Cause such as memory loss and judgement.

As a result, a person suffers from impairments in functions such as memory, language, visual-sensory abilities, problem-solving skills, self-management, attention, and concentration.  Although dementia is more common among the elderly, even it can affect people of any age.


5, அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு / Attention-deficit hyperactivity disorder


கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு

அவதானக்குறைவு மற்றும் அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய் ஆகும் ஒரு சில செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் “ எங்கையோ வேடிக்கை பார்ப்பது” போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே குழந்தைகளின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு வகைபாட்டை அறிய முடிகின்றது. இக்குறைபாடு உள்ளது என்று அறிந்திட, குழந்தைகளின் ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் தோன்றும் என்று உளவியல் நோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் நான்காவது உரைதிருத்தப் பதிப்பு (DSM-IV-TR) குறிப்பிடுகின்றது

A chronic condition means affected person attention difficulty to concentrate, looking hyperactivity and impulsiveness.

Cause is recollect childhood and can persist into adulthood. It may contribute to low self-esteem, troubled relationships and difficulty at school or work.

Attention deficit hyperactivity disorder (ADHD) is a psychological disease that occurs at a young age with symptoms such as “having fun somewhere” and not being able to concentrate fully on a certain activity.  This type of deficiency can be identified by observing the hyperactivity of children at an early age.  In order to know that this deficiency exists, at least twelve of the eighteen symptoms of this deficiency must have appeared for a period of six months before the age of seven.  According to the Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fourth Revision (DSM-IV-TR), six of these symptoms appear to be related to inattention, and the other six appear to be related to hyperactivity.

6, பிளவுபட்ட மனநோய்/ Schizophrenia


உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வானது, நம் ஐந்து புலன்களையும் பாதிக்கலாம். பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி ஆகியவை.பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது..

Type of a disorder that affects a person’s ability to feel,  think, and behave clearly.

It is a  combination of brain chemistry and structure may play a role.

Perceptual distortions can affect all five of our senses.  Vision, hearing, taste, consumption, and touch. It typically presents with hallucinations, paranoid, delusional, or disorganized speech and thinking, as well as significant social and occupational performance disturbances.


7, பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு / Obsessive compulsive disorder


பாதிக்கப்பட்ட நபர் சில செயல்களை மீண்டும் மீண்டும் செய்கின்றனர், அல்லது சில எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து (“மிகை எண்ணங்கள்”) கொண்டிருப்பார்.


இவர்கள் செய்யும் செயல்களில் கை கழுவுதல், பொருட்களை எண்ணுதல் மற்றும் கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்தல் போன்றவை அடங்கும். சிலருக்குப் பொருட்களைத் தூக்கி வீசவும் கடினமாக இருக்கும்.இந்த நடவடிக்கைகள் அந்த நபரின் அன்றாட வாழ்க்கையை எதிர்மறையாகப் பாதிக்கும்.இதன் தாக்கம் ஒரு நாளில் 60 நிமிடத்திற்கு மேல் நீடிக்கலாம்.பெரும்பாலான பெரியவர்களுக்கு தாங்கள் அவ்வாறு நடந்துகொள்வது தெரிவதில்லை.


Also called: OCD


Excessive thoughts (obsessions) that lead to repetitive behaviours (compulsions).


Unreasonable thoughts and fears (obsessions) that lead to compulsive behaviours.


The affected person repeats certain actions, or thinks certain thoughts over and over again (“obsessions”).


 Their tasks include washing hands, counting items and checking that the door is locked.  Some people also find it difficult to throw objects. These actions can negatively affect the person’s daily life. The impact can last more than 60 minutes in a day. Most adults are not aware that they are doing so.


8,  மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு/ Autism


பல வகையான நரம்பியல் சார்ந்த நடத்தை இயல்புகள், மற்றும் பிறருடன் பேசும்  திறனில் சிக்கல்கள், பாதிக்கப்பட்ட கற்பனைத் திறனுடையவர்களாகவும், ஒரே மாதிரியான செயல்களைத் மீண்டும் மீண்டும் செய்பவர்களாகவும் அதாவது விரல்களை இடம், வலமாக ஆட்டுதல், கைகளைஆட்டிக்கொண்டே இருத்தல்.


Autism spectrum disorder impacts the nervous system and affects the overall cognitive, emotional, social and physical health of the affected individual.


cause of this ability to communicate and interact.


A variety of neurobehavioral abnormalities, and problems with the ability to communicate with others, have impaired imagination, and repetitive actions such as finger pointing, right-to-right movements, and hand-waving.

9, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு/ Post traumatic stress disorder


 மன அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்றவை. இதன் அறிகுறிகளில் தொல்லையூட்டும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நிகழ்வுகளுடன் தொடர்புடைய கனவுகள், மனம் அல்லது உடல் அழுத்தம் முதல் மன அதிர்ச்சி தொடர்பான தாக்கங்கள் வரை இருக்கலாம், மற்றவரை தவறான கண்ணோட்டத்தில் யோசித்தல் மற்றும் பிரச்சனைக்கு தூண்டல். இந்த அறிகுறிகள் ஒரு மாதத்திற்கு அதிகமாகவும் நீடிக்கலாம். பாதிப்பு கொண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மற்றும் தன்னை தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகம்.


 Also called: PTSD


Previous  past jncidents triggers that can bring back memories of the trauma accompanied by ntense emotional and physical reactions.


Can occur after trauma, such as sexual violence, road accidents or other life-threatening events.  Symptoms can include disturbing thoughts, feelings, or dreams related to events, mental or physical stress, to trauma-related influences, misrepresentation of others, and preoccupation with trouble.  These symptoms may last for more than a month.  Sufferers are more likely to commit suicide and self-harm.


 

0 Comments