Metally Retardation Road Side Person





Metally Retardation Road  Side Person





நம்முடைய முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் 65 முதியோர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுப்பது போல் வயது முதிர்ந்த பெரியவர்கள் (ஆதரவற்றோர்) வீட்டில் இருப்பவர்கள் மற்றும் சாலையோரம் இருப்பவர்கள் என 72 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றோம்
அதில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆறுமுகநேரி to திருச்செந்தூர் செல்லும் வழியில் பூஜா சர்விஸ் சென்றர் அருகில் ஒரு ஓலை குடிசையில் படுத்திருப்பார்
இன்று காலை(20.10.2019) மழை பெய்து கொண்டிருந்தது வழக்கமாக நமது முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு கொண்டு செல்லும் முதியவர் பாலகிருஷ்ணன் என்னிடம்
“ஐயா மழை பெய்து கொண்டிருக்கிறது, நான் செல்லும் சைக்கிள் பழுதாகி விட்டது தங்கள் பைக்கில் கொண்டு கொடுத்துவந்துவிடலாம் என்றார்”
சரி என்று அவரை அழைத்துச் சென்றேன்
அந்த மனநோயாளி படுத்திருக்கின்றார் அவர் படுத்திருந்த ஓலை குடிசையில் நான்கு பக்கமும் திறந்த வெளி அவர் படுத்திருந்த இடம்
படுத்து படுத்து பள்ளமாகி போனது எனவே இரவில் பெய்த மழை தண்ணீர் அவர் படுத்திருந்த இடத்தில் நிறைத்து விரித்த போர்வை உடுத்த உடை அனைத்தும் நனைந்து அதோடு சத்தமிட்டு கொண்டே இருந்தார்,
பின்பு முதியோர் இல்லம் வந்து மன்வெட்டி கொண்டு போய் அந்த இடத்தை உயர்த்தி தண்ணீர் சுற்றி வெளியே செல்ல வகை செய்து வந்தேன்.
ஆனாலும் வரும் மூன்று மாதங்கள் (Oct, Nov Dec)மழையும், குளிரும் இருக்கும் ஆகவே அவரை எடுத்துக் கொண்டு போய் நமது முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் இருக்கும் முதியோர்களோடு அல்லாமல் தனியாக ஒரு செட் அமைத்து பாதுகாக்க முயற்சித்தோம் ,அந்த செட் அமைக்க போதுமான நிதி இல்லை. அன்பு நண்பர்களின் உதவியால் முதியோர் இல்லம் தோட்டத்தில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது.
21/10/2019 அன்று இரவு அந்த மனநோயாளியை தூக்கி கொண்டு வந்து நமது முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் வைத்து உணவு வழங்கப்பட்டது. 22/10/2019 காலை அந்த மனநோயாளியை குளிப்பாட்டி மாற்று உடை அணிவிக்கபட்டுள்ளது. இன்று முதல் அவருக்கு சிகிச்சை அளிக்க உள்ளோம். இதைப்போலவே திருச்செந்தூர் தாலுகா அளவில் 200 மேற்பட்ட மனநோயாளியாளிகளும், முதியோர் களும் உள்ளனர் அவர்களும் நம்மை போல்இந்த பூமியில் பிறந்தவர்கள் ஆனால் இயற்கையும் காலசூழ்நிலையும் அவர்களை இன் நிலைக்குள்ளாகிவிட்டது
நாம் அனைவரும் சேர்ந்து செயல் பட்டால் இவர்களில் பெரும்பாலானோர் சரிர ஆரோக்கியம் ,உள்ளத்தில் மகிழ்ச்சியும், அவர்கள் ஜீவ காலம் வரை மனநிறைவுடன் வாழ வழி செய்யலாம் _நன்றி இப்படிக்கு _லைட் முதியோர் இல்லம் அறுமுகநேரி.
(தொடர்புக்கு +919489022803)

0 Comments